கிங் மேக்கர்
பிறப்பு: ஜூலை 15, 1903
இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.
இறப்பு: அக்டோபர் 2, 1975
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு:
கு. காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “விருதுநகரில்” குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் ‘காமாக்ஷி’. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை “ராஜா” என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாக்ஷி + ராஜா) ‘காமராஜர்’ என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியில்” சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு:
டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். “ஹோம் ரூல் இயக்கத்தின்” ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.
மேலும், ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு:
‘காங்கிரஸ் தலைவர்’, ‘இந்திய விடுதலை வீரர்’, ‘இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்’, ‘மிகச் சிறந்த பேச்சாளர்’ எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.
தமிழக முதல்வராக காமராஜர்:
1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
முதல்வராக காமராஜர் ஆற்றியப் பணிகள்:
காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!
இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
[7/9, 12:55 PM] +91 94873 52221: 1967
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, திமுக அறியணை ஏறியது.
அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம் சொன்னார்,
"மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அப்படியும் நீங்கள் ஜெயிப்பதற்குத் தேவையான வாக்குகள் விழவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ நாம் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தோம் என்பதைக் கூடப் பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!"
அதற்கு காமராஜர் சொன்ன பதில்,
"அட, போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கிக் குடுக்கிற மகன், ‘எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக்க குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?
[7/9, 12:55 PM] +91 94873 52221: வடகத்தார் மதித்த ஒரே.. . தமிழனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
கர்மவீரருக்கு தலைவணங்குகின்றேன்
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!
இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
[7/9, 12:56 PM] +91 94873 52221: தங்கமே! தண் பொதிகைச்
சாரலே! தண்ணிலவே!
சிங்கமே! என்றழைத்துச்
சீராட்டுந்தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள்
தோட்ட்கள் ஏதுமில்லை!
ஆண்டிகையல் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே!
கவியரசர் கண்ணதாசன்
காமராசர் தாலாட்டு.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார். விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமராஜின் அன்னையார் பெயர் சிவகாமி. மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார்.
குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் என்றும் அறியப்படுகிறார்
மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் காமராஜர். காமராஜரின் வாழ்க்கையென்பது ஒரு சாதாரண மனிதரின் வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்ன என்பதன் விளக்கம் தந்த வாழ்க்கை என்ன தனி மனித வாழ்விலும், பொது வாழ்விலும் அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறைகள் காந்தியடிகளின் ‘சத்ய சோதனை’ போன்றதாகும். அதனால் தான் காமராஜரையும், காந்தியடிகளோடு ஒப்புமைப்படுத்தி ‘தென்னாட்டுக் காந்தி’ என்று போற்றிப் புகழுகின்றோம்.
[7/9, 12:56 PM] +91 94873 52221: எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை? காமராசரின் ஆட்சி காலம்: ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் ... காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்! 1.நெய்வேலி நிலக்கரித் திட்டம் 2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை 3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் 4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை 5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை 6.கல்பாக்கம் அணுமின் நிலையம் 7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை 8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை 9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை 10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை 11.துப்பாக்கித் தொழிற்சாலை 12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 13.சேலம் இரும்பு உருக்காலை 14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை 15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை 16.சமய நல்லூர் அனல்மின் நிலையம் 17.சென்னை அனல்மின் நிலையம் 18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை இவை மட்டுமா? மணிமுத்தாறு ஆரணியாறு சாத்தனூர் அமராவதி கிருஷ்ணகிரி வீடூர் வைகை காவிரி டெல்டா நெய்யாறு மேட்டூர் பரம்பிக்குளம் புள்ளம்பாடி கீழ்பவானி என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை! அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14 இன்னும் சொல்லவா? 159 நூல் நூற்பு ஆலைகள் 4 சைக்கிள் தொழிற்சாலைகள் 6 உரத் தொழிற்சாலைகள் 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள் ரப்பர் தொழிற்சாலை காகிதத் தொழிற்சாலை அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று. தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார். மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே...! காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன) அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்... இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில் இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா..? இல்லை "இலவச"த்தின் பேரில் நம்மைப் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா..?
#காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-
1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்
போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்
சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்
ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட
பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,
நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற
மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்
குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்
சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில
தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்
காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து
போய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,
திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி
கட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்
உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக
சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக
ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்
பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட
காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்
காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.
எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்
கொள்வார்.
11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்
அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற
ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்
பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட
சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார்.
கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்''
வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்
மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில்
பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய
தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான்
இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை
ஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து
வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்
"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை
சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்
அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு
விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்
கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்
ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்
வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்
தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா
வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை
ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை
பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.
அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234
பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்
பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.
21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்
8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே
காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை
வைத்திருந்ததாக சொல்வார்கள்.
22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத
கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்
எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.
இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு
அத்துப்படியாக இருந்தது.
23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்
முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்
பதவியை ராஜினமா செய்தார்.
24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்
சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி
இருக்கிறார்.
25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்
ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி
சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்
ஆச்சரியப்பட்டனர்.
26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல
திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை.
"மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்
இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க
காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா
காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்
இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது
குறிப்பிடத்தக்கது.
28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,
4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்
கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து
போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்
பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய
உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே
பயன்படுத்தினார்.
31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை
குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்
மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே
போட்டுக் கொள்வார்.
32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.
`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்
இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்
என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.
பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை
பற்றி மக்களுடன் விவாதிப்பார்.
34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,
இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்
ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்
சாவி ஆச்சரியப்பட்டார்.
35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்
என்று செய்து விட மாட்டார். நிதானமாக
யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த
செயலை எக்காரணம் கொண்டும் செய்து
முடிக்காமல் விட மாட்டார்.
36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்
கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்
வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்
தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண
கிராமத்தான் போலவே பேசுவார்.
37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்
உறுப்பினர் ஆனார்.
38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,
நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்
சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்
காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'
என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்
`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை
முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை
காமராஜரையே சேரும்.
41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்
வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்
தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,
இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்
பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்
பாடுபட்டார்.
43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்
இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு
விட்டார்.
44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி
உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,
ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு
விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்
விடுத்தன.
45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்
சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,
செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா
போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்
காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்
முழுவதும் இருந்தார்கள்.
47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை
மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக
1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து
வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்
ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள
`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு
நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்
கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்
தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ
வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா
வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற
பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்
பெற்றார்.
51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ
கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்
தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி
ஆச்சரியப்படுத்தினார்.
52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,
குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி
முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்
தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை
கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்
போவதுமில்லை.
56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு
பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்
சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்
ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்
விரும்பி சாப்பிடுவார்
57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்
எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு
வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'
என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு
கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு
டிரங்குப் பெட்டிதான்.
59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு
சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்
`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என
அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-
ல் சேர்ந்தார்.
60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்
உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்
காமராஜரும் கலந்து கொண்டார்.
61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி
பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்
கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.
62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்
நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக
இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்
காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு
நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய
மூவரும்தான்.
64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்
1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்
கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்
சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்
அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை
செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்
திரும்பி பார்க்க வைத்தார்.
66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்
மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்
பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்
ஏற்படுத்தப்பட்டது.
67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்
பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு
பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்
திறந்து வைத்து சாதனை படைத்தார்.
69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,
செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்
தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.
70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே
இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி
வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,
தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை
உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.
71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்
இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.
விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே
முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.
72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்
மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி
காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா"
எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.
74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில
்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட
போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய
செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).
நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.
75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக
எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்
நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்
பேசுவார்.
76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்
செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்
பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,
முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.
77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய
போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்
காமராஜர்.
78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்
ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு
இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து
அனைவரையும் வியக்க வைத்தார்.
79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்
கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.
80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்
காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டு
நினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்
தலையைவெளியிட்டது.
82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காம
ராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.
சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.
83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்
சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற
மெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று
தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்'
என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்
காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.
85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்
பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்
காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக
தமிழக அரசு மாற்றியது.
86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்
மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.
87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,
`கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து
இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா
இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்
வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.
என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்
பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு
கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்
கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன்
ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது
தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்
சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!
91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை
நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி
ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை
மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான
அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை
செய்கிற ஆசை இருந்தது.
93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு
போதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து
விடுவார்.
94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை
சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படு
வதையோ அவரால் பொறுத்துக் கொள்ள
முடியாது.
95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக
எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்
கொண்டவர் காமராஜர்.
96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம்
முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்
`முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி
அனுப்பி விடுவார்.
97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு
எப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்
பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்
கேட்டு ஆவண செய்வார்.
98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க
முடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்
சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.
99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே
பிடிக்காது அவருக்கு.
100. சொற்களை வீணாகச் செலவழிக்க
மாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்
சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசிய
செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.
101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.
ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம்
ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.
102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில்
என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்
முக்கியமானவர் என்பதெல்லாம்
அவருக்குத்தெரியும்.
103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார்.
தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத்
தயங்குவதில்லை.
104. சொல்லும் செயலும் ஒன்றாக
இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும்.
உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்
முழுமையாகப்பெற்றிருந்தார்.
அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பா
க வழிநடத்த முடிந்தது.
106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி
விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்
அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை
மணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக்
கொண்டு விடுவார் அவர்.
107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு
திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.
108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள்
எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்
அவர்.
109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.
தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்
இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.
110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை.
அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான
வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு
விடுவார்.
111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம்
உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்
செல்வார். KING 👑
காமராசர் பற்றிய கவிதைகள்:
பெரும்தலைவர் காமராஜர் பற்றி
ஒரு சிறு கவிதை...
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
ஒரு தீர்க்க தரிசியை
நேசிப்பதைப் போல்
உன்னை நேசிக்கிறேன்…
உன்னால்தான் முடிந்தது
தாயையும் பார்க்காமல்
தாய்நாட்டைப் பார்க்கும் சக்தி !
விருதுநகர்
மிகப் பொருத்தமான பெயர் !
உன் பிறப்பே
அவ்வூருக்கு மிகப்பெரிய விருது !
நீ நினைத்திருந்தால்
கரன்ஸி நோட்டுகளால்
விருதுநகரில்
இன்னொரு இமயமே
எழுப்பியிருக்க முடியும் - ஆனால்
நீயோ
லட்சுமியை விரட்டி
சரஸ்வதியை வரவழைத்தாய்.
இன்று
இவர்களோ
சரஸ்வதியையே
லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
ஆமாம்… நீ
கல்விக்கண் திறந்தாய்!
இவர்களோ
கல்விக் கடை திறந்தார்கள்!
நிஜத்தைச் சொல்லுகிறேன்
மூத்த தலைவர்கள்
பதவி விலகும் திட்டத்தை
வரவேற்று
முதல்வர் பதவியில் விலகி
அதற்கு நீயே
முன்னுதாரணமானாய் !
பல பேரை உயர்பதவியில்
அமரச்செய்து கிங்மேக்கரானாய் !
அரியாசனத்தின் மீது
உனக்கு
ஆசையில்லை !
உன் ஆசையெல்லாம்
”அறியா” சனங்களின் மீதுதானே !
இந்தியாவே
உன்னிடம் இருந்தது !!
இருந்தபோதும் .....
நீ இறந்தபோதும் - உன்
சட்டைப்பை
காலியாகவே இருந்தது!
இந்த பக்குவம்
ஆறாம் வகுப்பு வரை
படித்த உனக்கு
வந்ததைப்போல்
இம்மண்ணில்
அதிகம் படித்ததாக
எண்ணி ஆறறிவில்
ஐந்தறிவாக
நடப்பவர்களுக்கு வருவது எப்போது ???
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
💞 *_காமராஜர்...._*
வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .
நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.
விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.
நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.
நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.
பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.
அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.
வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.
நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.
உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.
நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.
நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.
நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.
நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!
K.S