Sunday, 10 July 2016


பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்...!
பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்: கல்வித் தரத்தை மேம்படுத்த கல்வியாளர்கள் யோசனை

தகுதியான ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்ய தமிழக அரசு பி.எட் (B.Ed), டி.டி.எட் (D.T.Ed) படித்தவர்கள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாய மாக்கி உள்ளது.


அதனால், தற்போது அரசு ஆசிரியர் ஆவதற்கு பி.எட், டி.டி.எட் மட்டுமே அடிப்படைத் தகுதியாக கருத முடியாது. அதேநேரத்தில், பிளஸ் 2, இள நிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் யார் வேண்டுமானா லும் பி.எட், டி.டி.எட் படிப்பில் சேரலாம், ஆசிரியராகலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் ஆகலாம். அதற்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை.

அரசின் இந்த நடவடிக் கையை தனியார் பள்ளி நிர்வாகங் கள் சரியாக பயன்படுத்திக் கொண்டதால், ஆசிரியர் பயிற்சி முடித்தும் அரசுப் பள்ளிகளில் பணி வாய்ப்பு கிடைக்காதவர்கள், மாற்றுத் துறைகளுக்குச் செல்ல முடியாமல் தனியார் பள்ளிகளில் 2 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் கொத்தடிமைகளைப் போல பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை பார்க்கும்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்களைவிட, டெட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை அதிக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் எடுக்க வைத்து சாதிக்கின்றனர். அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்களை நம்பி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், வசதியானவர்கள் மற்றும் நடுத்தர மக்கள், தங்கள் குழந்தைகளை கூடுதல் மதிப்பெண், 

No comments:

Post a Comment